அரச வைத்தியசாலைகளில் அவசரமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்தி வைக்க தீர்மானம்

- வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய தீர்மானிக்கப்படும்
- மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடே காரணம்

அரசாங்க வைத்தியசாலைகளில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக குறித்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆயினும் அத்தியாவசிய மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் இடம்பெறுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இது தொடர்பான தீர்மானங்கள் விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைக்கமைய தீர்மானிக்கப்படும் என, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்கு இந்நடைமுறையை முன்னெடுப்பதற்கான பணிப்புரையை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...