மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்தாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி

தமது ஆணைக்குழுவை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

குறித்த மனு இன்று (10) அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியது

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மாணவர்களின் மனித உரிமைகளை மீறுவதாக தெரிவித்து தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறும், வழங்கிய இணக்கப்பாட்டை மீறியதன் மூலம் ஆணைக்குழுவிற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி, இலங்கை மின்சார சபை, அதன் தலைவர் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் தமது ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...