துருக்கி பூகம்பம் ஏன் மிகவும் கொடியது?

துருக்கியில் இடமபெற்ற பூகம்பத்துடன் ஒப்பிடகையில், 2011ல் ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி - இதில் 22,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் - 9.1ரிக்டர் அளவில் பதிவானது.

முழு நகரத்தையும் தண்ணீரின் மூழ்கடித்து, வீடுகளை நெடுஞ்சாலைகளில் இழுத்துச் சென்று,  நாட்டின் மிக பேரழிவை அந்த சம்பவம் ஏற்படுத்தியது.

2010ல், ஹைட்டியில் 7.0ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 220,000முதல் 300,000 வரை உயிரிழந்த்தாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 300,000 பேர் காயமடைந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

2004ம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுமத்ரா கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது,  இது சுனாமியை ஏற்படுத்தியது,  இது 227,898 பேரைக் கொன்றதாக அல்லது காணாமல் போனதாக கருதப்படுகிறது.

Year

Country

Magnitude

Deaths

Injured

Homeless

Damages

2010

Haiti

7

222570

300000

Unknown

$11 trillion

2004

Indonesia*

9

165708

Unknown

532898

$7 trillion

2008

China

8

87476

366596

Unknown

$116 trillion

2005

Pakistan

8

73338

128309

5000000

$8 trillion

2004

Sri Lanka*

9

35399

23176

480000

$2 trillion

2003

Iran

7

26796

22628

45000

$1 trillion

2011

Japan*

9

19846

5933

Unknown

$273 trillion

2004

India*

9

16389

6913

Unknown

$2 trillion

2015

Nepal

8

8831

17932

Unknown

$6 trillion

2004

Thailand*

9

8345

8457

Unknown

$2 trillion

2023

Turkey/Syria

8

7200

35600

Unknown

Unknown

2006

Indonesia

6

5778

137883

699295

$5 trillion

ந்த நிலநடுக்கம் மிகவும் கொடியதாக மாறுவதற்கு பல காரணிகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அது நிகழ்ந்த நேரம்  அதிகாலையில்  நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலர் படுக்கையில் இருந்ததால் தற்போது வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

கூடுதலாக குளிர் மற்றும் இலேசான பனி மழை பெய்து வருவதினால், எல்லையின் இருபுறமும் மீட்பு முயற்சிகளை பெரும் சவாலாக அமைந்துள்ளது.

வெப்பநிலை ஏற்கனவே மிகக் குறைவாக உள்ள நிலையில் பூஜ்ஜியத்திற்கு கீழே பல டிகிரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

காஸியான்டெப்பில் -4டிகிரி செல்சியஸ் (24.8டிகிரி ஃபாரன்ஹீட்) ஆகவும், அலெப்போவில் -2டிகிரியாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் முறையே -6டிகிரி மற்றும் -4டிகிரிக்கு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலைமைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிக் குழுக்களுக்குச் செல்வது சவாலாக உள்ளது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர்கள்  புறப்பட முடியவில்லை என்று துருக்கிய சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இருந்தபோதிலும்,  பூகம்பத்தின் பேரழிவுகளின் மத்தியில் குடியிருப்பாளர்களை தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக கட்டிடங்களை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இரு நாடுகளிலும் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் கட்டிட உள்கட்டமைப்பு பற்றி பலர் கேள்விகளைக் கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆனால் அனைத்து கட்டிடங்களும் நவீன துருக்கிய நில அதிர்வு தரநிலையின்படி கட்டப்படவில்லை என்று பொறியியலாளர்கள் பலர் கூறிவருகின்றனர். வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் உள்ள குறைபாடுகள், குறிப்பாக பழைய கட்டடங்களில், பல கட்டடங்கள் அதிர்ச்சியின் தீவிரத்தை தாங்கக்கூடிய சக்தியில்லை என்றும் தெரியவந்துள்ளது.


Add new comment

Or log in with...