- நாளை அயர்லாந்துடன் பயிற்சிப் போட்டி
தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நேற்று முன்தினம் (03) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
சாமரி அத்தபத்து தலைமையிலான 15 வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் அதிகாரிகள் என 10 பேர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்கா புறப்பட்டுச் சென்ற இலங்கை அணி ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னதாக பெப்ரவரி 06 ஆம் திகதி அயர்லாந்துடனும் பெப்ரவரி 08 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுடனும் பயிற்சிப் போட்டிகளில் ஆடவுள்ளது.
வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை அணி தொடரில் முதல் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. அனுபவ வீராங்கனைகள் மற்றும் இளம் வீராங்கனை ஒன்றிணைந்த அணி ஒன்று கிடைத்திருப்பது சாதகமான ஒன்றாகும் என்று சாமரி அத்தபத்து தென்னாபிரிக்கா செல்லும் முன்னர் நம்பிக்கை தெரிவித்தார்.
Add new comment