வரலாற்றில் மிக வயதான நாயாக ‘பொபி’ சாதனை

போர்த்துக்கலின் 30 வயதான நாய் ஒன்று இதுவரை பதிவான மிக வயதான நாய் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

12 தொடக்கம் 14 ஆண்டுகள் மாத்திரமே ஆயுள் எதிர்பார்ப்பைக் கொண்ட பொபி என்ற இந்த நாய் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி உலகில் இதுவரை வாழ்ந்த மிக வயதான நாய் என்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக 1939 ஆம் ஆண்டு 29 வயது வரை வாழ்ந்த அவுஸ்ரேலியாவின் ப்ளுவாய் என்ற நாயே இதுவரை வாழ்ந்த மிக வயதான நாயாக சாதனை படைத்திருந்தது.

கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதிக்கு பொபியின் வயது 30 ஆண்டு மற்றும் 226 நாட்களாக பதிவானது.

இதனை போர்த்துக்கள் அரசின் விலங்குகள் தேசிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் செல்லப்பிராணிகள் தரவு மூலம் உறுதி செய்யப்பட்டதாக கின்னஸ் உலக சாதனை பதிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நாய் போர்த்துக்கலின் மேற்குக் கரைக்கு அருகில் இருக்கும் கொங்கியுரோஸ் என்ற கிராமத்தில் தனது வாழ்நாள் முழுவதும் ஒரே குடும்பத்தின் செல்லப்பிராணியாக வாழ்ந்து வருகிறது.

பொபி வயது முதிர்ச்சியால் நடப்பதற்கு சிரமப்படுவதாகவும் காண் பார்வை குறைந்திருப்பதாகவும் அதனை வளர்க்கும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...