உலகத் தமிழ் வர்த்தக சங்கம் எதிர்வரும் ஜூன் இரண்டாம் வாரத்தில் இந்திய அரசு மற்றும் மலேசிய அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகத்தின் அனுசரணையுடன் பன்னாட்டு சிறு குறுந்தொழில் மாநாடு ( International MSME B2B Meet) மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், பேரா மாநிலத்திலும் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இந்தியாவிலுள்ள பல்வேறு வர்த்தக சங்கங்கள் வர்த்தகர்கள் 250க்கும் மேற்பட்டோர் மலேசியாவிற்கு வருகை புரிய உள்ளனர். மேலும், மலேசியாவில் உள்ள பல்வேறு மாநில இந்திய வர்த்தக சங்கங்கள், உணவக உரிமையாளர் சங்கங்கள், சிறுதானிய இறக்குமதியாளர்கள், ஆடை உற்பத்தி ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், இந்திய பாரம்பரிய மருத்துவ வகைகளான சித்தா, ஆயுர்வேதா, மருந்து வகைகளை இறக்குமதி செய்பவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சங்கங்கள் ஏற்றுமதி இறக்குமதி தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
மலேசிய உலக பெருந்தொழில் ஏற்றுமதியில் 40% இறக்குமதியில் 33 % உள்ள இரு நாட்டு வர்த்தகத்தில் சிறு மற்றும் குறுந்தொழிலில் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்நிகழ்வை உலகத் தமிழ் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், மலேசியாவில் முதன் முதலில் தமிழ் பெண் அமைச்சராக பதவியேற்றுள்ள சரஸ்வதி கந்தசாமி, சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ள இவ்வேளையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் அவர்களும் இந்தியாவுடன் நட்பு பாராட்டி வர்த்தகத்தை மேன்மை அடைய நோக்கத்தில் செயல்படுவதால் சிறு மற்றும் குறுந்தொழில் அடுத்த கட்ட பொருளாதார நகர்விற்கு எடுத்துச் செல்ல உள்ளது.
இந்நிகழ்வை பற்றி அறிந்த பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், தொழில் வாய்ப்புகளை தேடுவோர் மலேசியாவில் நடைபெறும் பன்னாட்டு சிறு குறுந்தொழில் B2B மாநாட்டில் கலந்து கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளனர் என உலகத்தமிழ் வர்த்தக சங்க தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான செல்வக்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள்(whatsapp +60166167708) எண்ணிலும் [email protected] மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்
Add new comment