Friday, February 3, 2023 - 6:26pm
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் (04) சிறைக்கைதிகள் சிலர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள 588 சிறைக் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 பேர் உள்ளிட்ட 622 பேருக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கைதானவர்களில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, புனர்வாழ்வாளிக்கப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Add new comment