Friday, February 3, 2023 - 6:00am
தென் பகுதியில் இலங்கை மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது,பேரலிய மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெறும் துறைமுக வாயில் அகழ்வுப் பணிகளையும் அவர்,பார்வையிட்டார்.
பேருவளை கச்சேரியில் அரசாங்க அதிபரைச் சந்தித்து அங்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.
பேருவளை, மருதானை மீன்பிடித் துறைமுகத்திற்கு கள விஜயம் செய்து அங்கு நடைபெறும் துறைமுகத்தை ஆழகுபடுத்தும் பணிகளையும் அமைச்சர் டக்ளஸ் ஆராய்ந்தார்.
Add new comment