சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆராய

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொருட்டு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவுக்குழுவின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின்

தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் பி.ப. 2.00 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறும்.

பாராளுமன்ற புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் (08) ஆரம்பமாவதையிட்டு இதுதொடர்பிலும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் பிரேரணைகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3வது கூட்டத்தொடர் அண்மையில் நிறைவுசெய்யப்பட்டது. புதிய கூட்டத்தொடர் மீண்டும் எதிர்வரும் 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை, பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெற்றுள்ள நிலையில் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட சுமார் 70 தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான உறுப்பினர்களை விரைவில் தெரிவு செய்யப்படவுள்ள தாக பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

 

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...