புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிய விமானம்

டுபாயிலிருந்து நியூசிலாந்துக்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம், 13 மணிநேர பயணத்திற்குப் பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

டுபாயில் இருந்து கடந்த ஜனவரி 27ஆம் திகதி புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் ஒக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக மீண்டும் திருப்பி விடப்பட்டது.

சற்று நேரத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்துக் காத்திருந்த பயணிகள் மீண்டும் டுபாயிலேயே கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.


Add new comment

Or log in with...