சிம்பாப்வே டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து வீரர் அழைப்பு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான சிம்பாப்வே அணியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கரி பலன்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வேயில் பிறந்த 33 வயது பலன்ஸ் தான் குடியேறிய நாடான இங்கிலாந்துக்காக 23 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் விதியின்படி வீரர் ஒருவர் முழு அங்கத்துவ நாடு ஒன்றில் இருந்து மற்ற நாட்டுக்காக ஆடுவதற்கு மூன்று ஆண்டு கால இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பூர்த்தி செய்ததை அடுத்தே அவர் சிம்பாப்வே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் சிம்பாப்வே அணிக்காக கடந்த மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் புலவாயோவில் வரும் சனிக்கிழமை (04) ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...