சுதந்திர தின வைபவத்துக்காக காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடை உள்ளிட்ட இடங்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த இருவர், கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு (31) 8.00 மணியளவில் இந்த இடத்தை அனுமதியின்றி இருவரும் புகைப்படம் எடுத்தனர்.இதன்போது, அங்கு நின்ற பொலிஸார் இவர்களைக் கைது செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள், கொழும்பு மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment