மகளிருக்கு முன்னுரிமை வழங்கும் இந்திய தேசம்

வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத நிகழ்வு!

இந்தியாவின் 2023-_24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பா.ஜ.க அரசின் 2024- ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்திய முழுமையான இறுதி பட்ஜெட் இதுவாகும்.

ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் நிதியமைச்சர், பெண் குடியரசு தலைவரிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காகச் சமர்ப்பித்துள்ளார். இது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இப்படியொரு நிகழ்வு நடந்ததே இல்லை. ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெப்ரவரி 1 ஆம் திகதி 2023-_24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா தொற்றுக் காரணமாக Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்பட்டது, இந்த ஆண்டும் அதே நடைமுறை தொடரப்படுகிறது.

இந்தியாவின் வரவுசெலவுத் திட்டத்தில் முற்போக்கான பல்வேறு அம்சங்கள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...