நியூ செளத் வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ள சந்திக்க ஹதுருசிங்க மீண்டும் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, ஹதுருசிங்கவுடன் உடன்பாடு ஒன்றை எட்டி இருப்பதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரசல் டொமிங்கோவின் இடத்திற்கான புதிய தலைமை பயிற்சியாளர் பெப்ரவரி 18 மற்றும் 20க்கு இடையே நியமிக்கப்படுவார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஹதுருசிங்க 2014 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் பயிற்சியாளராக செயற்பட்ட காலத்தில் அந்த அணி சிறந்த திறமையை வெளிப்படுத்தி இருந்தது. தொடர்ந்து அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டார்.
ஹதுருசிங்க போன்ற உறுதியான மற்றும் வலுவான ஒரு பயிற்சியாளர் தேவை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கடந்த காலங்களில் அடிக்கடி கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment