கலா பொல 2023: இலங்கையில் காட்சிக் கலையை ஊக்குவிக்கும் 30 வருட நிறைவை கொண்டாடுகிறது

இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொல, இலங்கை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் 30 வருட நிறைவை, எதிர்வரும் 2023 பெப்ரவரி 19 ஆம் திகதி 'கிரீன் பாத்' என அழைக்கப்படும், ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் ஒரு பசுமையான சூழலில் கொண்டாடவுள்ளது. உலகப் புகழ்பெற்ற வெளியரங்கு கலை கண்காட்சிகளான பரிஸின் Montmartre மற்றும் ஒக்ஸ்போர்ட் Turl Street Art Festival கலை விழா ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட, இலங்கையின் மிக முன்னணியில் திகழும் கலா பொல 2023 (Kala Pola 2023) கண்காட்சியானது, அனைவராலும் அறியப்படுகின்ற ஒரு காட்சிக் கலை (visual art) கண்காட்சியாகும். இது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கலை ஆர்வலர்களை ஒன்றிணைத்து, கலைஞர்கள் தமது கலையை வெளிப்படுத்த ஒரு துடிப்பான தளத்தை உருவாக்குகிறது. இது ஒரு பரந்த மற்றும் உற்சாகமான பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் கீற் அறக்கட்டளையின் (George Keyt Foundation - GKF) எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இது, 1994 ஆம் ஆண்டு முதல் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தொடர்ச்சியான அனுசரணை மூலம் வளர்க்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களின் அனுபவத்தை மெருகூட்டுவதற்கும், அதிக கலைஞர்களை உள்ளடக்கி, அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் முயற்சிக்கிறது. இதன் மூலம் கலைஞர்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்துகிறது.

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சட்ட தலைவரும், செயலாள்கை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் தலைவருமான, நதிஜா தம்பையா இது பற்றி கருத்து வெளியிடுகூறுகையில், "கலா பொல ஆனது இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் அதனை வளர்ப்பதற்குமான, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் முயற்சிகளில் முதன்மையான முயற்சியாகும். கலா பொல அதன் 3 தசாப்த கால பயணத்தின் மூலம், இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கான ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பாதை வரைபடத்தின் அடித்தளத்தை திறம்பட உருவாக்கியுள்ளதோடு, இலங்கையிலுள்ள சிரேஷ்ட கலைஞர்கள் அல்லது வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு ஒப்பற்ற, துடிப்பான தளத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது." என்றார்.

எதிர்வரவுள்ள கலா பொல திறந்தவெளி கலைக் கண்காட்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின், பெருநிறுவன சமூகப் பொறுப்பு தலைவி கார்மெலின் ஜயசூரிய, "கலா பொல நிகழ்வானது, இலங்கை கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் அதே வேளையில் அவர்களுக்கான தொடர்ச்சியான மேம்படுத்தப்படுத்தப்பட்ட தளத்தை நிலைநிறுத்தவும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் எமது கலைஞர்களை ஆதரிக்கும் வாய்ப்புகளை வளர்த்தெடுக்கவும் முயற்சிக்கிறது. அதன் மாபெரும் வெற்றியானது, அதன் வலையமைப்பு மற்றும் கற்றறிதல் வாய்ப்புகளுக்கும் ஒரு சான்றாக விளங்குகிறது. இது இந்த ஒரு நாள் நிகழ்வின் மூலம் மட்டுமல்லாது, வருடம் முழுவதும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையால் இணையத்தில் நடத்தப்பட்ட டிஜிட்டல் ஓவிய காட்சிக்கூடத்தின் மூலமும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட கடந்த இரண்டு வருட காலத்திலும் மெய்நிகர் கலா பொல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மீண்டும் நேரடியாக இடம்பெறும் இந்த வருட மெகா நிகழ்வின் மறுமலர்ச்சியுடன், அதிக கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்பதோடு, மதிப்புமிக்க கொள்வனவுகளை மேற்கொள்ளவும்  மூலம் கலைஞர் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்காக அதிகளவான பார்வையாளர்களை இம்முறை எதிர்பார்க்கிறோம்." என்றார்.

ஜோர்ஜ் கீற் அறக்கட்டளையின் (GKF) தலைவர் மைக்கல் அந்தோனிஸ் தெரிவிக்கையில், “GKF இன் முக்கிய நோக்கமானது ‘கலைக்கான வாய்ப்பு’ ஏற்படுத்துதல், குறிப்பாக இலங்கை கலைஞர்களை ஊக்குவிப்பதாகும். கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையின் கலைஞர்களுக்கும் கலை சமூகமான GKF இற்கும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்காக நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஒரு பிரதான சுற்றுலா அம்சமாக விளங்கும் கலா பொல எனும் வர்த்தக நாமமானது, சந்தேகத்திற்கிடமின்றி கொழும்பின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் கிரீன் பாத் ஆனது, அதன் 30 வருடம் முழுவதும் நிரந்தரமான சிறிய அளவிலான கலைச் சந்தையாக மாறியிருப்பது அதன் தாக்கத்திற்கு மிகப் பெரிய சான்றாகும்!" என்றார்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்பு பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை கவனம் செலுத்தும் 6 துறைகளில், கலை மற்றும் கலாசாரமும் ஒன்றாகும். கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) ஆனது, 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை 7 பல்வேறு துறைகளில் இயக்கி வருகிறது. 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, அது LMD சஞ்சிகையால் கடந்த 17 வருடங்களாக இலங்கையின் 'மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக' தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) முழுமையான அங்கத்தவராகவும், UN Global Compact இன் பங்கேற்பாளராகவும் இருக்கும் JKH ஆனது, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசடைவை கணிசமாகக் குறைப்பதில் ஊக்கியாக உள்ள, சமூக தொழில்முனைவோர் முயற்சியான 'Plasticcycle' திட்டம் மூலமாகவும் 'நாளைய தினத்திற்கான தேசத்தை மேம்படுத்துதல்' எனும் அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) தூரநோக்கை நடைமுறைப்படுத்தி வருகிறது. 


Add new comment

Or log in with...