கராத்தே புதிய விதிகள் தொடர்பில் கருத்தரங்கு

உலக கராத்தே சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான புதிய தொழிநுட்பம் மற்றும் போட்டி விதிமுறைகள் பற்றிய கருத்தரங்கு (22) சம்மாந்துறை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இலங்கை கராத்தே கிழக்கு மாகாண சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் முஹம்மது இக்பால் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட கராத்தே போதனாசிரியர்கள், நடுவர்கள், மத்தியஸ்தர்கள், புதிய நடுவர் மற்றும் மத்தியஸ்தர் பரீட்சைக்குத் தோற்றவுள்ள கறுப்புப்பட்டி மாணவர்கள் மாத்திரம் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிதியாகவும் வளவாளராகவும் தென்னாசிய கராத்தே சம்மேளனத்தின் நடுவர் குழாமின் தவிசாளர் ஷிஹான் ஆர்.ஜே. அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு 2023ஆம் ஆண்டுக்காக உலக கராத்தே சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தொழிநுட்பம் மற்றும் போட்டி விதிமுறைகள் பற்றிய தெளிவான விளக்கங்களை வழங்கினார்.

கல்முனை மத்திய தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...