இந்திய வட, கிழக்கு பிராந்திய அபிவிருத்தியில் மத்திய அரசு அக்கறை

மிகப் பெரிய போக்குவரத்துத் திட்டங்களின் ஊடாக இந்தியாவின் மலைப்பாங்கான வட கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி அடைந்து வருவதாகவும் அசாமில் அடுத்தடுத்து வளர்ச்சித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு வருவது ஒரு உதாரணம் என்றும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.  
கடந்த வெள்ளியன்று தலைநகர் காவஹத்தி பண்டு நெடுஞ்சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, தற்போது நடக்கும் அபிவிருத்தித் திட்டங்களின் வேகத்தில் நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து நடைபெற்றிருக்குமானால் வடகிழக்கு பிரதேச வளர்ச்சி பெரிய அளவில் நிகழ்ந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.  
இப்பாதைத் திறப்பு விழாவில் டில்லியில் இருந்தபடியே கலந்து கொண்ட இந்தியப் பிரதமர், காவஹத்தியில் தண்ணீர் சார்ந்த தொழில் பயிற்சி அபிவிருத்தி நிலையத்தையும் திறந்து வைத்தார். அவர் மேலும் கப்பல் பழுதுபார்க்கும் நிலையமொன்றுக்கான அடிக்கல்லை காவஹத்தி பிரம்மபுத்ர நதியோரமாக நாட்டி வைத்தார். பண்டு நகரை தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் அன்றைய தினமே நடைபெற்றது.  
முன்னைய ஆட்சிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் நகரங்களையே குறி வைத்ததாக இருந்ததாகவும் தற்போது வட கிழக்கு பகுதிகளை மையப்படுத்தியதாக இருப்பதாகவும் தன் உரையில் குறிப்பிட்ட அசாம் முதலமைச்சர், நதிவழி போக்குவரத்து அபிவிருத்தியில் தற்போது மத்திய அரசு நாட்டம் கொண்டிருப்பது முக்கியமான அம்சமெனத் தெரிவித்தார்.  
அசாம் முதலமைச்சர் தெரிவிப்பு.

Add new comment

Or log in with...