அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பெப்ரவரி 08 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்றையதினம் (25) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு மற்றுமொரு வழக்கில் ஜனவரி 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டதோடு, அன்றையதினம் அவரது பிணைக் கோரிக்கை தொடர்பான முடிவு அறிவிக்கப்படுமென உத்தரவிடப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் ஓகஸ்ட் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த வசந்த முதலிகே 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment