பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பெளசி; பெயரிட்டு அதி விசேட வர்த்தமானி வெளியீடு

- கொழும்புபு விருப்பு வாக்கில் 7ஆம் இடத்தில் இருந்தார்

ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.ம.ச. கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததை அடுத்து, வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் ஐ.ம.ச. கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலின் அடிப்படையில் 7 ஆவது இடத்திலுள்ள ஏ.எச்.எம். பெளசி பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 6 ஆசனங்கள் கிடைத்திருந்ததோடு, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஏ.எச்.எம். பெளசி, மனோ கணேசன் எம்.பிக்கு. அடுத்த படியாக 7 ஆவது இடத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி முஜிபுர் ரஹ்மான் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...