டென்டர் கோர அமைச்சரவை அனுமதி
இருதய நோயாளிகளின் சிகிச்சைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் எனொக்சபாரின் சோடியம் மருந்தை கொள்வனவு செய்வதற்காக இந்திய உற்பத்தி மற்றும் விநியோகஸ்தர்களிடம் விலைமனு (டெண்டர்) கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த வகையில்
இருதய நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக பெற்றுக் கொள்ளப்படும் மேற்படி மருந்தில் 80,000 மாத்திரைகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாடளாவிய அரசாங்கஆஸ்பத்திரிகளில் பாரிய மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
நீரிழிவு நோயாளர்களுக்கான மருந்து உட்பட பல்வேறு மருந்துகளுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தூரப்பிரதேசங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அவ்வாறான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்தச் சங்கம், அரசாங்கம் இது தொடர்பில் உடனடி தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment