1,105 கிலோ பீடி இலை: நீர்கொழும்பில் இருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1,105 கிலோ பீடி இலைகள் நீர்கொழும்பு துன்ஹல்பிட்டிய களப்பு பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு துன்ஹல்பிட்டிய களப்பு பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் நேற்று (24) அதிகாலையில்

மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையிலேயே,இவை கைப்பற்றப்பட்டன.இவற்றைக் கடத்தி வந்த இரண்டு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர். கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக, இலங்கை கடற்படையும் இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து தீவை சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து கடற்படையினர் (23) அதிகாலை நீர்கொழும்பு துன்ஹல்பிட்டிய களப்பு பிரதேச வீடொன்றில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். அவ்வீட்டிலிருந்து சட்ட விரோதமாக 35 சாக்குகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1,105 கிலோ 700 கிராம் நிறையுடைய பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன. இதனைக் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் இரண்டு டிங்கிப் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர் கொழும்பில் வசிக்கும் 42 மற்றும் 44 வயதான நபர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...