ஹம்பாந்தோட்டையில் முதலாவது தேர்தல் வன்முறை; ஆசிரியர் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் ஹம்பாந்தோட்டையில், நேற்று (24) இடம்பெற்றது.இதையடுத்து கட்சியின் நகர சபை உறுப்பினரொருவர் பொலிஸாரால்

கைது செய்யப்பட்டார். உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தது.இதில் தாக்குதலுக்குள்ளானவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தொட்டை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினரான ஆசிரியர் ஒருவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் ஹம்பாந்தோட்டை பொலிஸில் முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்கவே மாநகர சபை உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மாத்தறை மஹிந்த ராஜபக்‌ஷ வித்தியாலயத்தில் பணியாற்றுபவராவார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளின் போதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...