சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலின் கடந்த ஆண்டின் சிறந்த ரி20 ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் தலா ஒரு இலங்கை வீர, வீராங்கனை இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் 2022இல் சோபித்த வீரர்களை கொண்டே ஐ.சி.சி 11 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதில் ஆடவர் அணியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் ஜொஷ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் விராட் கொஹ்லி, சூர்யகுமார் யாதவ், மொஹமட் ரிஸ்வான் மற்றும் ஹார்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோன்று இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி சுழல்பந்துவீச்சு வீராங்கனை இனோகா ரணவீர மகளிர் ரி20 அணியில் இடம்பெற்றுள்ளார். இனோகா ரணவீர கடந்த ஆண்டு 19 ரி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 4 போட்டிகளில் 3 இற்கும் அதிகமான விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.
இதில் இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஸ் மற்றும் ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment