Tuesday, January 24, 2023 - 2:12pm
கைது செய்யப்பட்ட ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார நுகர்வோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த இருவருக்கும் ஜனவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று (24) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியுள்ளது.
Add new comment