பாரிய இடி, மின்னல்; 9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

- முன்னெச்சரிக்கையாக இருக்கவும்

பாரிய இடி, மின்னல் தொடர்பில் நாட்டின் 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (24) மாலையில் அல்லது இரவு வேளைகளில் நாட்டின் மேல் மாகணத்திலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, சப்ரகமுவ மாகாணதிலுள்ள இரத்தினபுரி, கேகாலை, மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பாரிய இடி மின்னலுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் ஒரு சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

PDF icon WW_T_20230124EN.pdf (247.02 KB)

PDF File: 

Add new comment

Or log in with...