Friday, January 20, 2023 - 9:18am
கலேவெல, ஆதாவெல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி மற்றும் இளைஞரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு 14 வயது எனவும் இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவருக்குமிடையியே காதல் தொடர்பு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நன்னடத்தையின் பின்னர் குறித்த சிறுமி சில நாட்களுக்கு முன்னர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment