கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில்
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான மின் விநியோக கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார பொறியியலாளர் ஒருவரின் முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைதுசெய்துள்ளனர்.
மின்கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்த போது 30 மற்றும் 43 வயதுடைய இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட
விசாரணையில் குறித்து இருவரும் ஏற்கனவே மின்கம்பிகளை திருடியமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Add new comment