Thursday, January 19, 2023 - 6:00am
ஒருவர் படுகாயம்
கொழும்பு, கொட்டாஞ்சேனை 06 ஆவது ஒழுங்கை பகுதியில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரொன்றில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் அவரது வாய் பகுதியிலும், வயிற்றிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.-
Add new comment