இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வருகை

- இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட விசேட குழுவினர் இன்று (19) மற்றும் நாளை (20) ஆகிய இரு தினங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

மாலைதீவின் தலைநகர் மாலியிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரை, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் விமானநிலையத்தில் வரவேற்றர்.

அவர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...