கொழும்பு மேயர் வேட்பாளராக ரோசி சேனாநாயக்க?

தனது விருப்பத்தை வெளியிட்டார் ரோசி

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய முதல்வர் ரோசி சேனாநாயக்க விருப்பம் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. மேயர் வேட்பாளர் குறித்து கட்சி எதனையும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கபண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்ற என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ரோசி சேனாநாயக்க குறித்து விசேடமாக ஆராயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...