தனுஷ்க குணலதிக்க மீதான பாலியல் குற்ற வழக்கு பெப்ரவரி 23 இற்கு ஒத்திவைப்பு

- பிணை நிபந்தனைகள் தொடர்ந்தும் அமுல்

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

செயலி (Tinder) ஒன்றின் ஊடாக அறிமுகமான அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, சிட்னி பொலிஸில் குறித்த பெண் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஒக்டோபர் 29ஆம் திகதி டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்பு ஏற்பட்ட குறித்த சிட்னி பெண் நவம்பர் 02 ஆம் திகதி, இரவு விருந்துக்குச் சென்ற பின் அவர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக குணதிலக்க மீது  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த வருடம் நவம்பர் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டு 11 நாட்களுக்குப் பின்னர் 150,000 அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப் பிணையில் அவரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்திருந்தது.

இதேவேளை, தனுஷ்க மீது தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை வெளியில் நடமாடுவதை தடுத்து உத்தரவிட்ட நீதிமன்றம், Tinder உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கும் தடை விதித்திருந்தது.

தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் சார்பில் முன்வைக்கப்பட்ட கடந்த நவம்பர் 17ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (12) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த பிணை நிபந்தனைகள் தொடர்ந்தும் செல்லுபடியாகும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது தனுஷ்க குணதிலக்க நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் அவரது சட்டத்தரணி ஆஜரானார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் இணம்பெறவுற்ற வழக்கு விசாரணயின் போதும். குணதிலக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


Add new comment

Or log in with...