போராட்டக்கள செயற்பாட்டாளர் ரந்திமால் இன்று (05) கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.
ரந்திமால் கமகே துபாயிலிருந்து நாடு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து, அதன் ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்ற சம்பவம் தொடர்பில் தானிஸ் அலி என்பவர் கடந்த ஜூலை 26ஆம் திகதி விமான நிலையத்தில் விமானமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு தானிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்தான வழக்கு ஜனவரி 09 இல் கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ள திகதி குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment