வட்ஸ்அப் பயன்பாட்டின் தேவை அதிகரித்து வருவதால் பழைய ஸ்மார்ட் தொலைபேசி வடிவங்களில் டிசம்பர் 31 இற்குப் பின் வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு தொடக்கம் அப்பிள், சம்சுங், ஹுவாவி போன்ற முன்னணி கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட 49 வகை ஸ்மார்ட் தொலைபேசி வகைகளில் வட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக்கொள்ளவுள்ளது.
“சாதனங்கள் மற்றும் மென்பொருட்கள் தொடர்ச்சியாக மாற்றத்திற்கு உள்ளாகின்றன. எனவே இயங்குதள முறைகளுக்குள் நாம் செயற்படுகிறோம் மற்றும் அப்டேட்களை வழங்குகிறோம் என்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக மீளாய்வு செய்து வருகிறோம்” என்று வட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த பழைய திறன்பேசிகளில் முழுமையாக வட்ஸ்அப் இயங்காமல் போகாது என்றபோதும் அப்டேட்டுகளுக்கு அவை உதவாது.
இதில் அப்பிளின் iOS 9 மற்றும் அதற்கு மேல் மற்றும் அன்ட்ரொயிட்டின் v4.3 மற்றும் அதற்கு மேல் உள்ள கையடக்கத் தொலைபேசிகளில் வட்ஸ்அப் தொடர்ந்தும் இயங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
Add new comment