லங்கா பிரீமியர் லீக் தொடரில் தம்புள்ள அவுரா அணிக்கு எதிராக கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
கொழும்பு அணி தனது முதல் போட்டியில் கண்டியிடம் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (08) தம்புள்ளவை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணிக்கு நிரோஷன் திக்வல் 41 பந்துகளில் 62 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது. லஹிரு குமார 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய தம்புள்ள அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே பெற்றது. இதன்மூலம் தசுன் ஷானக்க தலைமையிலான தம்புள்ள அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
Add new comment