Mandous சூறாவளி தென் ஆந்திர கரையோரம் ஊடாக கடந்தது

- இதன் தாக்கம் காரணமான வானிலை படிப்படியாக குறையும்
- நாட்டின் பல பகுதிகளிலும் ஓரளவு பலத்த காற்று
- மீனவ சமூகம் அவதானமாக செயற்படவும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள 'Mandous' (மாண்டஸ்) எனும் சூறாவளியானது இன்று (09) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசம் ஊடாக கடந்து சென்றுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தொகுதியான படிப்படியாக வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், இன்று (10) பிற்பகல் அளவில் காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் நிலவும் வானிலை மற்றும் இதன் தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றையதினம் (10) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மத்திய, தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மீனவ சமூகம் அவதானமாக செயற்படவும்
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் அலைகள் (2.5 – 3.5) மீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (2.0 – 2.5) மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி  ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் கடல் பயணத்தில் ஈடுபடுவோரும் மீனவ சமூகமும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக  வளிமண்டலவியல்திணைக்களத்தால்வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக  அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

PDF File: 

Add new comment

Or log in with...