மோடி நன்றி தெரிவிப்பு

ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியாவுக்கு தமது ஆதரவை வழங்கியதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட செய்திக்கு, பதிலளிக்கும் வகையில் மோடி பதிவிட்ட ட்விட்டர் செய்தியில், “நன்றி, இந்தியாவின் ஜி20 தலைமையை பலப்படுத்துவதற்கு உங்களது ஆதரவு முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார். சிறந்த உலகொன்றை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...