தொழிலார்களுக்கு முழு சம்பளத்தை வழங்க கோணாமுட்டாவ நிர்வாகம் இணக்கம்!

- செந்தில் தொண்டமானின் தொழிற்சங்க நடவடிக்கை அறிவிப்பை அடுத்து நடவடிக்கை

அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட கோணமுட்டாவ தோட்ட தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளம் வழங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கோணமுட்டாவ தோட்டத்தில் கடந்த மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு அரைச் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இ.தொ.காவின் தொழிற்சங்க நடவடிக்கையால், தோட்ட நிர்வாகம் முழு  சம்பளம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூள் ஏற்றுமதிக்காக அனுப்ப தொழிலாளர்களால் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, மீண்டும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்காது, அரைச் சம்பளம் வழங்க தீர்மானித்திருந்த நிலையில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அத்தோட்டத்திற்கு இன்று நேரடி விஜயம் மேற்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க நிர்வாக முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...