Wednesday, December 7, 2022 - 1:44pm
இந்தியா டிசம்பர் மாதத்திற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது.
இரண்டு ஆண்டு தவணைக்காக பாதுகாப்புச் சபை அங்கத்துவத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இந்தியா தலைமை பொறுப்பை ஏற்பது இது இரண்டாவது முறையாகும்.
இந்தியாவின் தலைமையின் கீழ் டிசம்பரில் பாதுகாப்புச் சபையில் இரு முக்கிய அமைச்சர் மட்டத்திலான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. டிசம்பர் 14, 15இல் இடம்பெறும் இந்த நிகழ்வில் சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை திட்டமிடல் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.
Add new comment