எம்23 கிளர்ச்சிக் குழு மீது குற்றம்சாட்டப்படும் கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.
பலவீனமான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டு சில நாட்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள கிராமங்கள் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளன.
எனினும் கிளர்ச்சியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டை அடிப்படையற்றது என்று மறுத்துள்ளனர். கிராமத்தில் துப்பாக்கிச் சண்டை ஒன்றின்போதும் இடையில் சிக்கி எட்டு கிராமத்தவர்கள் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் கொல்லப்பட்டவர்களில் ஏழு சிறுவர்கள் இருப்பதாகவும் தேவாலயம் மற்றும் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment