Wednesday, December 7, 2022 - 3:36pm
தேசிய சைக்கிளோட்ட சம்பியன்சிப் போட்டியின் சிரேஷ்ட ஆடவர் பிரிவில் அவிஷ்க மெடோன்சாவும் பெண்கள் சிரேஷ்ட பிரிவில் மதுமாலி பெர்னாண்டோவும் வெற்றியீட்டினர்.
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி கடந்த டிசம்பர் 2,3ஆம் திகதிகளில் அளுத்கமை மொரகல்ல காலவிலத்த மைதானத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அளுத்கமை, மத்துகமை, களுத்துறை நகரங்களை உள்ளடக்கியதாக போட்டிகள் இடம்பெற்றன.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் ஆலோசனையில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷான்த டி சில்வாவின் தலைமையில் இந்தப் போட்டி இடம்பெற்றது.
இதில் கனிஷ்ட, சிரேஷ்ட பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன.
Add new comment