Wednesday, December 7, 2022 - 6:00am
வலம்புரி சங்கு வைத்திருந்த சந்தேக நபரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
இந்நபர் கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி 3ஆம் பிரிவில் இவர் கைதானார். இந்நபர், ஆரையம்பதியைச்சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்கவராவார்.
கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் நீதிமன்ற நடவடிக்கைக்காக காத்தான்குடி
பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Add new comment