இலஞ்சம் பெற்றதாக ஹொரவபொத்தானை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

ஹொரவபொத்தானை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் லஞ்ச ஊழல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரவ்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவில் செய்த முறைபாட்டின் பிரகாரம் இன்று (06) குறித்த நபரை கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

குறித்த வர்த்தகரின் மனைவிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு  அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு தொழில்நுட்ப அதிகாரி ரூ. 20,000 இலஞ்சம் கேட்டதாகவும் அதனையடுத்து அந்த பணத்தை பெற்றுக் கொள்ள சென்ற போதே இவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அப்துல்சலாம் யாசீம்


Add new comment

Or log in with...