மாணவியுடன் தொடர்பு; மனைவியை கொலைசெய்த ஆசிரியருக்கு சிறை

அவுஸ்திரேலியாவில் உயர்நிலைப் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு மனைவியைக் கொன்றதற்காக 24 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் டோசன் என்ற அந்த 74 வயது ஆடவர், அவரது மனைவி லினெட் டோசனைச் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

கிறிஸின் முன்னாள் மாணவரும் பிள்ளைப் பராமரிப்பாளருமான பதின்ம வயதுப் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த காலத்தில் கிறிஸ் அவரது மனைவியைக் கொன்றதாகக் கூறப்பட்டது.

அவரது சடலம் கண்டறியப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் டீச்சர்ஸ் பெட் என்ற ஆவணம் வெளியானதையடுத்து, அந்தக் கொலையில் சில முக்கியத் தடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

அதன் மூலம் புதியதொரு பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது

கிறிஸ் கள்ளத்தொடர்பு கொண்டிருந்த முன்னாள் மாணவி மீது தீவிர மோகம் கொண்டிருந்ததால் அவரது மனைவியைக் கொலைசெய்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதனால் அவருக்கு 24 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வயதின் காரணமாக அவர் சிறையிலேயே இறக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.


Add new comment

Or log in with...