தேசிய தைக்கொண்டோ போட்டி; கல்முனை ஸாஹிரா 5 பதக்கம்

இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட தைக்கொண்டோ சுற்று போட்டியில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப்பதக்கம் உட்பட மொத்தமாக ஐந்து பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதில் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 80–87 கிலோகிராம் எடைப் பிரிவில் ஜே.ஏ.சுமைத் தங்கப் பதக்கத்தை வென்றார். இப் போட்டியில் இந்தக் கல்லூரி முதல் தடவையாக பங்குபற்றி தேசிய மட்டத்தில் சாதனை படைத்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் தெரிவித்தார்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...