துறைமுக அதிகார சபையில் ஊழல் மற்றும் முறைகேடுகள்

கண்டறிய அமைச்சரினால் குழு அமைப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் மூவர் உள்ளனர். அதன்படி, எம்.டி.எஸ்.ஏ.பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் கேஜிபி வசந்த கமகே ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்தக் குழுவிற்கு அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு கிடைத்த அனைத்து முறைப்பாடுகளையும் விசாரித்து, குழுவின் அறிக்கை 6 மாதங்களுக்குள் விடயதிற்குப் பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...