இராமேஸ்வரத்திலிருந்து 2,100 Kg மஞ்சள் கடத்தல்

- 35 மூடைகளுடன் ஒருவர் கைது

இராமேஸ்வரம் மண்டபமருகே வேதாளை கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ எடைகொண்ட 35 மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 04 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் கைதான நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு குற்ற நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 04 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். பொலிஸார் விரட்டிச்சென்று 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். விசாரணையில் அவர், வேதாளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகொன்றில் 35 மூடைகளில் மஞ்சள் அடுக்கி வைத்திருப்பதாகவும், அதனை இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பொலிஸார் விரைந்து சென்று அந்த நாட்டுப்படகையும், 35 மஞ்சள் மூடைகளையும் கைப்பற்றினர். அந்த மூடைகளில் 02 ஆயிரத்து 100 கிலோ மஞ்சள் கட்டிகள் இருந்தன.

இதே வேதாளை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த சுமார் 300 கிலோ போதைவஸ்து கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு மறுநாளே இப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ மஞ்சள் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


Add new comment

Or log in with...