எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரது நடத்தை மிகவும் அநாகரிகமானது

பாராளுமன்றத்தில் சபாநாயகர் கண்டனம் தெரிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரிகமானது எனவும் அவர்கள் வீண் பேச்சுக்களால் சபையின் பெறுமதியான நேரம் வீணடிக்கப்படுவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் மேலும் தெரிவித்த அவர், ”சிலர் எழுந்து நின்று பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை. மிகவும் வருத்தமாக உள்ளது. அணியை நிர்வகிப்பது எனது பொறுப்பு அல்ல, அது உங்களுடையது” என தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...