- பல்கலைக்கு தெரிவான 171,497 பேரில் 91,115 பேரே விண்ணப்பம்
2021 க.பொ.த. உயர் தரப் பரீட்சை தொடர்பான பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடங்கிய முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் சுட்டெண்ணை வழங்கி, தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
- 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்: 283,616 பேர்
- 2021/2022 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : 171,497 பேர்
- 2021/2022 கல்வியாண்டில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவர்கள் : 91,115 பேர்
- முந்தைய கல்வியாண்டில் பல்கலைக்கழகத்தில் இணைந்தோர் (2020/2021 கல்வியாண்டு) : 43,927
- 2021/2022 கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்காக வழக்கமாக தெரிவு செய்யப்பட்டவர்கள் (மீளாய்பு விண்ணப்பத்திற்கு முன்) : 43,927
இதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பின்வரும் தளத்திற்கு பிரவேசிக்கவும்.
admission.ugc.ac.lk/selection
இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட உரிய கற்கைநெறி மற்றும் பல்கலைக்கழக விபரங்கள் SMS மற்றும் e-Mail ஊடாக உரிய விண்ணப்பதாரிக்கு 2 வாரங்களுக்குள் அனுப்பி வைக்கப்படுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான மேன்முறையீட்டை 30 நாட்களுக்குள் மேற்கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 க.பொ.த. உயர்த தர பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டன.
கடந்த 2021 இல் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை இவ்வருடம் பெப்ரவரி 07ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 05ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.
COP_2021_2022_ENGLISH_BR.pdf (320.63 KB)
අපගේ නිල වෙබ් අඩවියේ සහ වෙනත් මාධ්යයන්හි පලකර ඇති ඔබගේ විශ්වවිද්යාල ප්රවේශ ප්රතිඵලය වලංගු ප්රවේශ සහතිකයක් ලෙස භාවිතා කල නොහැකි බව කරුණාවෙන් සලකන්න.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள கூடிய பல்கலைக்கழக அனுமதி பெறுபேறுகள் மற்றும் பிற தொடர்பாடல் செயல்வகையினை செல்லுபடியான அனுமதி சான்றிதழாக பயன்படுத்த முடியாது என்பதை தயவு செய்து கவனத்திற் கொள்க.
Please note that the university admission results available in the official website of the UGC and other modes of communication cannot be used as a valid certificate of admission.
Copyright © 2021 University Grants Commission - Sri Lanka. All Rights Reserved.
Add new comment