Thursday, December 1, 2022 - 1:50pm
கொழும்பு எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று முன்தினம் (29) நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட பிரிமா இளையோர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கொழும்பு வடக்கு அணியை 3 விக்கெட்டுகளால் தோற்கடித்து கொழும்பு தெற்கு அணி சம்பயன் பட்டத்தை சுவீகரித்தது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தடிய கொழும்பு வடக்கு அணி 50 ஓவர்களுக்கும் 08 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. பதிலெடுத்தாடிய கொழும்பு தெற்கு அணி நிர்ணயிக்கப்பட்ட 45.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
Add new comment