பயிற்சியாளர்களை தேடும் வலைப்பந்து

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் தற்போது வெற்றிடமாகியுள்ள, இலங்கை வலைப்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் உதவிப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோருவதாக தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜுலை மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலக வலைப்பந்து சம்பியன்ஷிப்பினை இலக்காகக் கொண்டு, இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளன. புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்ட பின் இலங்கை அணியின் பயிற்சிகள் வரும் ஜனவரி முதல் நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...